

சென்னை,
மார்ச் 2020-ம் ஆண்டு முதல் நடத்தப்படும் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் புதிய பாடத்திட்டத்தின்படி மட்டுமே நடத்தப்படும். ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்களும், தேர்வுகளுக்கு வருகை புரியாதவர்களும் அந்தந்த பாடங்களை மட்டும் புதிய பாடத்திட்டத்தின் கீழ் 2020-ம் ஆண்டு முதல் நடைபெறும் தேர்வுகளில் எழுதி கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் அரசு தேர்வுத்துறை இயக் குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.