2026 சட்டமன்றத் தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல் - பியூஷ் கோயல் பேட்டி

உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களால் தமிழ் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல் - பியூஷ் கோயல் பேட்டி
Published on

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பியூஸ் கோயல் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இந்த தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல், தமிழ்நாட்டிற்கு மாற்றம் தேவை. இந்த அரசு வெளியேற வேண்டும். பிரதமர் மோடி வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு கொண்ட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் எதிர்காலத்தை மாற்றும்.

தமிழ் கலாசாரத்திற்கு மரியாதை கொடுக்காத உதயநிதி ஸ்டாலினை தமிழ்நாடு மக்கள் முதல்-அமைச்சராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்களால் தமிழ் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளது.இந்த திமுக அரசு விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.

நாம் அனைவரும் இணைந்து தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைப்போம். ராம சீனிவாசன் மதுரையில் மிகவும் பிரபலமான ஒரு ஆளுமையாவார். மக்களிடமிருந்து அவருக்கு மிகச் சிறந்த வரவேற்பும் ஆதரவும் கிடைத்துள்ளதாக நான் அறிகிறேன். இந்தத் தேர்தல் ஒரு மாற்றத்திற்கான தேர்தலாகும். தமிழகம் ஒரு மாற்றத்தை விரும்பகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com