2026 சட்டமன்ற தேர்தல்: ரூ. 599.24 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல்

தேர்தல் விதிமீறல்களை தடுக்க 2,283 பறக்கும் படைகளும், 2,221 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டது.
பறிமுதல்
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட்ட தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளில், ரூ. 599.24 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சோதனை

மாநிலம் முழுவதும் தேர்தல் விதிமீறல்களை தடுக்க 2,283 பறக்கும் படைகளும், 2,221 நிலையான கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளின் மூலம், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட பணம், மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் தேர்தல் விதிமீறலுடன் தொடர்புடைய பொருட்கள் என மொத்தம் ரூ.599.24 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் தகவல் அளித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com