இளங்கோவன் வீட்டில் இருந்து 21.2 கிலோ தங்கம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை

ஆர்.இளங்கோவன் அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார்.
இளங்கோவன் வீட்டில் இருந்து 21.2 கிலோ தங்கம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை
Published on

சென்னை,

தமிழ்நாடு கூட்டுறவு சங்க மாநில தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான ஆத்தூர் அருகே உள்ள புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது வீடு மற்றும் 27 இடங்களில் லஞ்சஒழிப்பு போலீசார் இன்று சோதனை நடத்தினர். சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

ஆர்.இளங்கோவன் அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராக உள்ளார். ஆர்.இளங்கோவன் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவர் இளங்கோவன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இளங்கோவன் வீட்டில் இருந்து 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. மேலும், ரூ.29.77 லட்சம் ரொக்கம், 10 சொகுசு கார்கள், 3 கணிணி ஹார்டு டிஸ்க், சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com