

சென்னை,
சென்னை பட்டினப்பாக் கத்தில் உள்ள 21.37 ஏக்கர் நிலத்தை வணிகப் பயன்பாட்டு மண்டலமாக வகை மாற்றம் செய்ய சென்னை பெருநகரவளர்ச்சிக்குழுமம் (சிஎம்டிஏ) ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கி வரும்தலைமைச்செயலகம் மற்றும்சட்டமன்றத்தைபட் டினப்பாக்கத்திற்கு இடமாற்றம் செய்து, அங்கு சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட் டில்20லட்சம்சதுரஅடிபரப் பளவில் பிரம்மாண்டமான புதிய வளாகம் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கு கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கிய அரசு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் முதற்கட்ட பணிகளையும் முன்னெடுத்து வந்தது.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் பி. ராஜ்கு மார் தலைமையில் சிஎம்டிஏவின் 289வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பட்டினப்பாக்கம் பகுதியில் இதற்கு முன்பு முதன்மை குடியிருப்புப் பகுதி, நிறுவனப்பயன்பாடு, திறந்த வெளி மற்றும் பொழுதுபோக்கு மண்டலம் உள்ளிட்டபல்வேறு பிரிவுகளில் இருந்த 21.37 ஏக்கர் பரப்பளவிலான நிலப்பகுதியை, புதிய கட்டுமானப் பணிகளுக்கு உகந்த வகையில் வணிகப் பயன்பாட்டு மண்டலமாக வகை மாற்றம் செய்ய முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதே சமயம், கடற்கரையோரத்தில் தலைமைச்செயலகம் அமைக்கப்பட்டால் அப்பகுதி மீனவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், கட லோர சுற்றுச்சூழல் சூழல் சமநிலை சீர்குலைவதுடன் கடற்கரைக்கு பொதுமக்கள் எளிதாகச் செல்வது தடைப்படும் என்றும் பல்வேறு அரசி யல் கட்சிகளும் மீனவ அமைப்புகளும் கடும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றன. மேலும், பல கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இத்திட்டத்திற்கு எதிராகக் கள மிறங்கி போராட்டங்களை நடத்தி, அரசு தனது உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இருப்பினும், இத்தகைய எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அரசு தனது முதற்கட்டபணிகளைத் தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது. தற்போது இத்திட்டம் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நிலையிலேயே இருப்பதாகவும், அந்த அறிக்கையின் முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகே அடுத்த கட்ட இறுதி முடிவுஎடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.