86 குழந்தைகள் உள்பட தமிழகத்தில் 2,142 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் நேற்று 2 ஆயிரத்து 142 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
86 குழந்தைகள் உள்பட தமிழகத்தில் 2,142 பேருக்கு கொரோனா
Published on

சென்னை,

நேற்று புதிதாக 30 ஆயிரத்து 376 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 1,244 பேரும், பெண்கள் 898 பேரும் உள்பட 2 ஆயிரத்து 142 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 561 பேர், செங்கல்பட்டில் 296 பேர், கோவையில் 179 பேர், திருவள்ளூரில் 106 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 86 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 374 பேரும் நேற்று கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

2,219 பேர் 'டிஸ்சார்ஜ்'

தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. மேலும் நேற்றைய நிலவரப்படி 16 ஆயிரத்து 829 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக சென்னையில் 5 ஆயிரத்து 759 பேரும், செங்கல்பட்டில் 2 ஆயிரத்து 353 பேரும், கோவையில் 1,114 பேரும் திருவள்ளூரில் 841 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.தமிழகத்தில் 842 பேர் ஆஸ்பத்திரி சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 ஆயிரத்து 219 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 34 லட்சத்து 67 ஆயிரத்து 283 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com