தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை..!

தமிழக மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மீனவர்கள் 22 பேர் விடுதலை..!
Published on

கொழும்பு,

நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை 22 பேரை இலங்கை கடற்படையினர் காகேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர். மேலும் மீனவர்களின் 3 விசைப்படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கடந்த மாதம் 22ம் தேதி இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட புதுக்கோட்டை, ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் உதவியுடன் அவர்கள் ஒருசில தினங்களில் நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com