22-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை வந்தது: தமிழகத்துக்கு இதுவரை 1,242 டன் ஆக்சிஜன் வினியோகம்

22-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை வந்தது: தமிழகத்துக்கு இதுவரை 1,242 டன் ஆக்சிஜன் வினியோகம் தெற்கு ரெயில்வே தகவல்.
22-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை வந்தது: தமிழகத்துக்கு இதுவரை 1,242 டன் ஆக்சிஜன் வினியோகம்
Published on

சென்னை,

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு வெளிமாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம் ஆக்சிஜனை தமிழகத்துக்கு வினியோகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 14-ந் தேதி முதல் தமிழகத்துக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று 22-வது ஆக்சிஜன் ரெயில் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து சென்னை தண்டையார்பேட்டை பணிமனைக்கு வந்தது. இதில் 85.18 டன் ஆக்சிஜன் 4 டேங்கர்களில் கொண்டுவரப்பட்டது. முன்னதாக 21-வது ஆக்சிஜன் ரெயில் மராட்டிய மாநிலம் டோல்வியில் இருந்து நேற்று அதிகாலை சென்னை வந்தது.

இதில் 59.69 டன் ஆக்சிஜன் 3 டேங்கர்களில் கொண்டுவரப்பட்டது. தமிழகத்துக்கு இதுவரை 1,242.6 டன் ஆக்சிஜன், எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com