

ராஜபாளையம் அருகே 23 மூடை ரேஷன் அரிசி வேனுடன் பறிமுதல் செய்யப்பட்டதுடன் டிரைவரை கைது செய்தனர்.
வாகன சோதனை
விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ராஜபாளையம் அருகே எஸ்.ராமலிங்காபுரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த வேனில் தலா 50 கிலோ கொண்ட 23 மூடை ரேஷன் அரிசி இருந்தது. வேனில் திருவேங்கடத்தைச் சேர்ந்த டிரைவர் கலையரசன் (வயது39) சுமை தூக்கும் தொழிலாளி முருகன் ஆகியோர் இருந்தனர். போலீசாரை கண்டதும் முருகன் தப்பி ஓடி விட்டார்.
டிரைவர் கைது
டிரைவர் கலையரசனிடம் போலீசார் விசாரணை நடத்திய போது எஸ்.ராமலிங்காபுரத்தை சேர்ந்த ராமர் பாண்டி என்பவர் திருவேங்கடத்தை சேர்ந்த சங்கிலி பாண்டி என்பவருக்கு 23 மூடை ரேஷன் அரிசியை வேனில் அனுப்பி வைத்ததாக தெரியவந்தது.இதனைத்தொடர்ந்து போலீசார் வேனுடன் 23 மூடை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருவேங்கடத்தை சேர்ந்த சங்கிலி பாண்டி, எஸ். ராமலிங்காபுரத்தை சேர்ந்த ராமர் பாண்டி, கலையரசன், முருகன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து டிரைவர் கலையரசனை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர்