இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய 23 பண்டல் போதை மாத்திரைகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்த உச்சிப்புளி அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 23 பண்டல் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் சிக்கின
இலங்கைக்கு கடத்த வீட்டில் பதுக்கிய 23 பண்டல் போதை மாத்திரைகள் பறிமுதல்
Published on

பனைக்குளம்,

.

போதை மாத்திரைகள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பெருங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போதை மாத்திரைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து கடலோர போலீசார் மற்றும் உச்சிப்புளி போலீசார் இணைந்து பெருங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 23 பண்டல்களில் போதை மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள், 2 பண்டல்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணை

போதை மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீடு யாருடையது, இந்த போதை மாத்திரை மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டது, வாங்கி வந்த நபர்கள் யார்? என தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சந்தேகத்தின்பேரில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com