மானூரில் 23 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: பெண் கைது

மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மானூரில் 23 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: பெண் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், மானூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சஜீவ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அழகியபாண்டியபுரம், சுப்பையாபுரம் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சுப்பையாபுரத்தை சேர்ந்த கண்ணன் மனைவி ராசாத்தி (வயது 35) என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், ராசாத்தியை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 23 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com