கூத்தாண்டவர் கோவிலில் 23 சவரன் நகை திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை

திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டும் திருவிழா நடைபெற உள்ள நிலையில் திருட்டு சம்பவம் நடைபெற்று உள்ளது.
கூத்தாண்டவர் கோவிலில் 23 சவரன் நகை திருட்டு – போலீஸ் தீவிர விசாரணை
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில், மூலவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த 23 சவரன் தங்க நகை திருடப்பட்டுள்ளது. சுவாமி கும்பிடுவது போல் கோவிலுக்குள் சென்று யாரேனும் நகையை திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

வருகின்ற செவ்வாய்க்கிழமை அன்று உலகப் புகழ்பெற்ற கூவாகம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டும் திருவிழா நடைபெற உள்ள நிலையில், இச்சம்பவம் கோயிலுக்கு வந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com