சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை - போக்சோ கோர்ட்டு தீர்ப்பு

கடந்த 2023-ம் ஆண்டு 5 வயது சிறுமியை கடத்தி சென்று சுபாஷ் சந்திரதாஸ் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை நெற்குன்றம் கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திரதாஸ் (54 வயது). கடந்த 2023-ம் ஆண்டு 5 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சுபாஷ் சந்திரதாஸை கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி பத்மா முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு, சுபாஷ் சந்திரதாஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு பாலியல் குற்றச்சாட்டின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், கடத்தல் குற்றச்சாட்டின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.

இந்த தண்டனையை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com