தமிழகத்தில் டெங்குவால் 23,241 பேர் பாதிப்பு: அமைச்சர் அருண்ராஜ் தகவல்

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
அமைச்சர் அருண்ராஜ்
Published on: 

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் கடந்த 2025-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் 25,585 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டில் தற்போது வரை 23,241 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று முன் தினம் மட்டும் 118 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியானது. டெங்கு கட்டுக்குள் தான் உள்ளது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

எனவே, பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். கொசுப்புழு ஒழிப்பு பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. காய்ச்சல் முகாம்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தேவையான அனைத்து மருந்துகளும் கையிருப்பில் உள்ளது. நர்சுகள் பற்றாக்குறையை போக்க 4,724 நர்சுகள் வெளிப்படைத் தன்மையுடன் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com