பொறியியல் கலந்தாய்வுக்கு 2.34 லட்சம் பேர் விண்ணப்பம்


பொறியியல் கலந்தாய்வுக்கு 2.34 லட்சம் பேர் விண்ணப்பம்
x

கோப்புப்படம்

கடந்த 17 நாட்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2,34,503 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும்.

இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்படும். இந்தக் கலந்தாய்வை தமிழ்நாடு அரசு சார்பில் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த சூழலில் வரும் கல்வி ஆண்டு (2025-2026) பி.இ., பி.டெக் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த மே 7ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வமுள்ள மாணவர்கள் https://www.tneaonline.org. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 6 மணி நிலவரப்படி கடந்த 17 நாட்களில் பொறியியல் கலந்தாய்வுக்கு 2,34,503 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் 1,66,404 பேர் கட்டணம் செலுத்தியும், 1,23,315 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர்.

1 More update

Next Story