அரசு பள்ளிகளில் 2,381 அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி: பள்ளிக்கல்வித்துறை தகவல்


அரசு பள்ளிகளில் 2,381 அங்கன்வாடி மையங்கள் செயல்பட அனுமதி: பள்ளிக்கல்வித்துறை தகவல்
x

ஆசிரியர்களுக்கு ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சென்னை,

அரசு பள்ளிகளில் 2,381 அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதி அளித்தும், அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், 'அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் முதல் தேதியிலேயே ஊதியம் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் எவ்வித காலதாமதமும் இருக்கக்கூடாது. இதை மாவட்டக் கல்வி அலுவலர் ஆய்வு செய்ய வேண்டும். மழலையர் வகுப்புகளை கையாளும் தற்காலிக சிறப்பாசிரியர்களுக்கு மாதம் ஒரு நாள் தற்செயல் விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. மேலும், இந்த ஆசிரியர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்து அவர்கள் எமிஸ் எண் பெற நடவடிக்கை எடுக்கவேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story