புதுக்கோட்டை போலீசில் 13 ஆண்டுகள் பணியாற்றிய மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை

புதுக்கோட்டை போலீசில் பணியாற்றிய மோப்நாய் இறந்ததை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 24 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை போலீசில் 13 ஆண்டுகள் பணியாற்றிய மோப்ப நாய்க்கு 24 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை
Published on

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்ட போலீசில் கடந்த 13 ஆண்டுகளாக ராக்கி என்ற துப்பறியும் நாய் பணியாற்றி வந்தது. இந்த ராக்கி துப்பறியும் நாய் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட வி.ஐ.பிகள் வரும்போது வெடிகுண்டு சோதனைகள் ஈடுபட்டு வந்தது.

மேலும் பல்வேறு வழக்குகளில் போலீசுக்கு உதவியாகவும் இந்த நாய் செயல்பட்டு வந்தது. கடந்த 13 ஆண்டுகளாக போலீசுக்கு உதவியாக இருந்த ராக்கி தற்போது டி.எஸ்.பி ரேங்கில் உள்ளது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக தான் ராக்கி ஓய்வு பெற்றது. இந்நிலையில் ராக்கி உடல்நல குறைவால் நேற்று நள்ளிரவு இறந்து போனது. இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ராக்கியின் உடல் வைக்கப்பட்டு அதற்கு போலீஸ் அதிகாரிகள் மலர்மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினர்.

இதில் போலீஸ் ஒருவர் ராக்கியின் உடலைக் கண்டு அழுது புலம்பியது காண்போரை கண் கலங்க வைத்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே தலைமையில் போலீஸ் அதிகாரிகள் ராக்கி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதன் பின்னர் 24 குண்டுகள் முழங்க ராக்கியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com