தஞ்சை அருகே 247 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு

உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சை அருகே 247 கிலோ கஞ்சா தீயிட்டு அழிப்பு
Published on

தஞ்சை,

உலக போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் சரகத்துக்கு உட்பட்ட 4 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் போலீசார் பறிமுதல் செய்த சுமார் 247 கிலோ கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள், நீதிமன்ற உத்தரவின்படி நேற்று தீயிட்டு அழிக்கப்பட்டன.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக போலீசார் தீவிர சோதனைகளை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கைகளின் போது பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளில் இருந்து மொத்தம் 247 கிலோ கஞ்சா மற்றும் பிற போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

தீயிட்டு அழிப்பு

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் தலைமையில் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள மருந்து கழிவுகளை எரித்து அழிக்கும் நிறுவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வீரபாண்டி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

போதைப்பொருள் ஒழிப்பில் போலீசார் தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com