108 ஆம்புலன்ஸ் சேவையால் 24,844 பேர் பயனடைந்துள்ளனர்

அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 24,844 பேர் பயனடைந்துள்ளனர்.
108 ஆம்புலன்ஸ் சேவையால் 24,844 பேர் பயனடைந்துள்ளனர்
Published on

அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையால் 2022-ம் ஆண்டு 24,844 பேர் பயன்பெற்றுள்ளனர். அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 19 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் இயக்கப்பட்டு வருகிறது. 108-ஐ அழைத்தால் சென்னையில் உள்ள கால் சென்டருக்கு சென்று பின்னர் அங்கிருந்து அந்தந்த மாவட்டத்திற்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்படும். இதையடுத்து அரியலூர் மாவட்டத்தை பொருத்தவரை நோயாளி இருக்கும் இடத்திற்கு சராசரியாக 15 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேருகிறது. அரியலூர் மாவட்டத்தில் ஒரு பச்சிளங்குழந்தை ஆம்புலன்ஸ், 3 அதிநவீன ஆம்புலன்ஸ்கள் உள்பட 19 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கடந்த ஜனவரி மாதத்தில் 2,170 பேரும், பிப்ரவரி மாதத்தில் 1,921 பேரும், மார்ச் மாதத்தில் 1,980 பேரும், ஏப்ரல் மாதத்தில் 1,881 பேரும், மே மாதத்தில் 2,012 பேரும், ஜூன் மாதத்தில் 1,955 பேரும், ஜூலை மாதத்தில் 1,909 பேரும், ஆகஸ்டு மாதத்தில் 2,024 பேரும், செப்டம்பர் மாதத்தில் 2,275 பேரும், அக்டோபர் மாதத்தில் 2,313 பேரும், நவம்பர் மாதத்தில் 2,219 பேரும், டிசம்பர் மாதத்தில் 2,185 பேரும் என மொத்தம் 24,844 பேர் பயனுள்ளனர். இதில் சாலை விபத்தில் 3,779 பேரும், கர்ப்பிணிகள் 6,361 பேரும் பயனடைந்ததுடன் 31 கர்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் உள்ளேயே பிரசவம் பார்த்துள்ளனர் என்று 108 ஆம்புலன்ஸ் மேலாளர் அறிவுக்கரசு தெரிவித்துள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com