காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 25 கடைகளுக்கு 'சீல்'; ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்ததால் நடவடிக்கை

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் சுமார் ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்துள்ளதால் 25 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 25 கடைகளுக்கு 'சீல்'; ரூ.3 கோடி வரை வாடகை பாக்கி வைத்ததால் நடவடிக்கை
Published on

மாநகராட்சி கடைகள்

காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 103 கடைகள் உள்ளன. இந்த கடைகளை ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்கியுள்ளது. பஸ் நிலையத்தில் பேன்சி கடை, டீக்கடை, பழக்கடை என பல்வேறு கடைகள் வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டிய மாத வாடகையை கடைக்காரர்கள் செலுத்த தவறியதால் பாக்கித் தொகை சுமார் ரூ.3 கோடி உயர்ந்துள்ளது.

25 கடைகளுக்கு 'சீல்'

கடந்த 2017-ம் ஆண்டு முதல் கடைக்காரர்கள் வாடகை செலுத்தாமல் ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை வாடகை பாக்கி செலுத்தாமல் தாமதித்து வந்துள்ளனர். இதனால் வாடகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க காஞ்சீபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி வருவாய் ஆய்வாளர் தமிழரசு உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் கால அவகாசம் கொடுத்தும் மாத வாடகை செலுத்தாத 25 கடைகளை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com