தேர்தல் நிதி ரூ.25 கோடி: மு.க.ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் விளக்கமளிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்

திமுகவிலிருந்து தேர்தல் நிதியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ரூ.25 கோடி வழங்கியதாக வரும் தகவலுக்கு மு.க.ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் விளக்கமளிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் நிதி ரூ.25 கோடி: மு.க.ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் விளக்கமளிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த்
Published on

பழனி,

பழனி மலைக்கோவிலில் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

தேமுதிக தலைவர் விஜயகாந்த், தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரும் நலமுடன் இருக்கவேண்டும் என்று முருகனை வேண்டி கொண்டேன். அதிமுக -தேமுதிக கூட்டணி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களிலும் தொடரும்.

கஷ்டப்படாமல் குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் எண்ணம் உள்ளவர்களே நீட் தேர்வில் தவறு செய்கிறார்கள். நல்லமுறையில் படித்து மருத்துவராகும் மாணவர்களே சேவை மனப்பான்மையுடன் பணிபுரிவார்கள்.

திமுகவிலிருந்து தேர்தல் நிதியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடிரூபாய் வழங்கியதாக வரும் தகவலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் விளக்கம் அளிக்கவேண்டும் எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com