2.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: டீ கடைக்காரர் கைது

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
2.5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: டீ கடைக்காரர் கைது
Published on

திருநெல்வேலி மாவட்டம், பழவூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கல்யாணிபுரம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த அரிகிருஷ்ணன் (வயது 56) என்பவருக்கு சொந்தமான டீ கடையில் போலீசார் சோதனை செய்து பார்த்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அரிகிருஷ்ணனை கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து 2 கிலோ 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com