

திருநெல்வேலி,
திருநெல்வேலி சரகத்தில் 250 கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 584 கிலோ 614 கிராம் கஞ்சா பொருட்கள் நெல்லை சரக ஐ.ஜி. திருநாவுக்கரசு தலைமையில் ஒரு தனியார் நிறுவனத்தில் தீயிலிட்டு அழிக்கப்பட்டன.
திருநெல்வேலி காவல் சரகத்திற்குட்பட்ட திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களின் காவல் நிலையங்கள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட 250 கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட 584 கிலோ 614 கிராம் கஞ்சாவினை அழிக்க சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் உத்தரவிடப்பட்டுள்ளது.
அந்த உத்தரவின்படி நெல்லை சரக போதைப்பொருள் அழிப்பு குழுவின் (Drug Disposal Committee) பரிந்துரையின்படி, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு தலைமையில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பாலசுப்பிரமணியம் சாஸ்திரி, திருநெல்வேலி மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் ஆனந்தி ஆகியோர் முன்னிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகா, விஜயநாராயணம் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பொத்தையடி பகுதியில் உள்ள பாப்பான்குளம் கிராமத்தில் உள்ள Aseptic Systems BMWM என்ற தனியார் நிறுவனத்தில் வைத்து மேற்சொன்ன கஞ்சா தீயிலிட்டு எரித்து அழிக்கப்பட்டது.