மதுரையில் பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை

காவல் ஆய்வாளர் வீட்டில் கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

மதுரை,

காவல் ஆய்வாளர் வீட்டில் 250 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிலக்கோட்டை விளாம்பட்டி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் ஷர்மிளா. இவரது வீடு மதுரை மாவட்டம் பாசிங்காபுரத்தில் உள்ளது. இந்த நிலையில் இவரது வீட்டில் இருந்து 250 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் வீட்டில், தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com