

சென்னை,
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-
தொழில் துறையில் தொட்டதற்கெல்லாம் கொள்கைகளை வெளியிடும் கொள்கை இலக்கற்ற விடியா அரசில், பெரிய நிறுவனங்களின் புதிய முதலீடுகள் ஏதும் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை காணவில்லை. அ.தி.மு.க. அரசால் துவக்கப்பட்ட தொழிற்சாலைகளே தங்களது புதிய கிளைகளை தமிழ்நாட்டில் பரப்புகின்றன, விடியா ஆட்சியில் புதிதாய் ஏதும் வந்ததாய் தெரியவில்லை,
செமி கண்டக்டர் [Semi Conductor] எனப்படும் குறை கடத்தி உற்பத்தியை ஊக்குவிக்க தனி கொள்கை வகுத்தாலும் நிர்வாகத் திறனற்ற அரசின் குறைபாட்டால், டாடா நிறுவனம் தமிழகத்தை விட்டு அசாம் மாநிலம் சென்றுள்ளது. அத்துடன் கூடவே ரூ.25ஆயிரம் கோடி முதலீடும் சென்று விட்டது. ஊதியம், வேலைவாய்ப்பு என இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றாமல் இருள் சூழ வைக்கும் விடியா அரசுக்கு எனது கண்டனங்கள்.
இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.