திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினர் 26 பேர் கைது


திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காள தேசத்தினர் 26 பேர் கைது
x

போலி ஆதார் அட்டை மூலம் சட்டவிரோதமாக தங்கி, பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நம் அண்டை நாடான வங்காள தேசத்தைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக வசித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பல்லடம் டி.கே.டி.மில் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் போலி ஆதார் அட்டை மூலம் சட்டவிரோதமாக 26 பேர் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இவர்கள் பல்லடம் டி.கே.டி.மில் பகுதியில் போலி ஆதார் பயன்படுத்தி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களிடமிருந்து போலி ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்களை நாடு கடத்தும் பணி நடந்து வருகிறது.

போலி ஆதார் அட்டைகளை வழங்கும் முகவர்கள் யார் என்பது குறித்து காவல் கண்காணிப்பாளரின் சிறப்பு தனிப்படை மற்றும் கியூ பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story