கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ரூ.26 லட்சம் உண்டியல் காணிக்கை

கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ரூ.26 லட்சத்தை உண்டியலில் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தினா
கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ரூ.26 லட்சம் உண்டியல் காணிக்கை
Published on

தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வருகைபுரியும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளியிலான பொருட்கள், பணம் ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

இந்நிலையில் நேற்று தாந்தோணிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது. திருப்பூர் துணை ஆணையர் செந்தில்குமார், தாந்தோணிமலை உதவி ஆணையர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது.

உண்டியல் காணிக்கை மூலம் பணமாக ரூ.26 லட்சத்து 14 ஆயிரத்து 756-ம், தங்கம் 27 கிராமும், வெள்ளி 202 கிராமும் கிடைத்தது. இப்பணியில் கோவில் பணியாளர்கள், கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் ஈடுபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com