

திண்டுக்கல்,
திண்டுக்கல் அருகே தோட்டனூத்து ஆர்.எம்.டி.சி. காலனியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 82). ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர். இவர் ஓய்வுக்கு பின்னர் கடந்த 30 ஆண்டுகளாக வீட்டில் காய்கறி தோட்டம் அமைத்து பாராமரித்து வருகிறார். அவர் தனது தோட்டத்தில் மரவள்ளிக்குச்சியை நட்டு, அதற்கு பசுஞ்சாணம், இயற்கை உரமிட்டு வளர்த்து வந்தார். தற்போது அந்தச் மரவள்ளி செடி சுமார் 7 அடி உயரம் வளர்ந்துள்ளது. இதையடுத்து அதனை நேற்று தோண்டி பார்த்துள்ளார்.
அப்போது அந்த ஒரே செடியில் மட்டும் 9 மரவள்ளி கிழங்குகள் வளர்ந்து இருந்தது. இதனை எடைபோட்டு பார்த்ததில் சுமார் 27 கிலோ இருந்ததை கண்டு அவர் மகிழ்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்த அக்கம், பக்கத்தினர் அந்த மரவள்ளி கிழங்குகளை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.'