

கண்காணிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். அந்த வகையில் லாட்டரி சீட்டு விற்ற போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ராஜா (வயது 57), கிருஷ்ணகிரி பெங்காலி தெரு ராஜ்பால் (69), ஓசூர் முருகேஷ் (44), தேன்கனிக்கோட்டை நியமுத்துல்லா (62), ஆசாத் தெரு எசானுல்லா (39), ராயக்கோட்டை கோவிந்தன் (58) ஆகிய 6 பேரையும் அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர்.
இதே போல மாவட்டம் முழுவதும் போலீசார் மளிகை, பெட்டிக்கடைகளில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் குட்கா, பான்பராக், விற்பனை செய்ததாக ஊத்தங்கரை காந்தி நகர் வேலு (53), கிருஷ்ணகிரி பாரீஸ் நகர் புஷ்பலதா (51), பெரியகரடியூர் அருகே மல்லிக்கல்லை சேர்ந்த வெண்ணிலா (40), மத்தூர் ஹரீஷ்குமார் (52) உள்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் எச்சரிக்கை
இதையடுத்து போலீசார் கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த குட்கா மற்றும் பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பாருட்களை பறிமுதல் செய்தனர். மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு மற்றும் புகையிலை பொருட்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.