

சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;
கடந்த 2025-26 நிதியாண்டில் தெற்கு ரெயில்வே தனது செயல் பாட்டுத்திறனில் மிகப்பெரிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக, ஒரே நிதியாண்டில் 28 புதிய ரெயில்கள் மற்றும் 2 ஒருவழி சிறப்பு ரெயில்கள் அறி முகப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, இந்திய அளவில் ஒட்டு மொத்த ரெயில் இயக்கத்தில் (புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உட்பட) 93.22 சதவீதம் துல்லியமான நேரத்தைப் பராமரித்து தெற்கு ரெயில்வே அனைத்து மண்டலங்களிலும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. கிராமப்புற மக்களின் வசதிக்காக 246 புதிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரெயில்கள் கூடுதல் தூரம் செல்லும் வகையில் நீட்டிக்கப்பட்டுள்ளன. 4 ரெயில்களின் சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.