தமிழகத்தில் 29 சதவீதம் மருந்துகளில் தரம் குறைவு - ஆய்வில் தகவல்

மருந்து கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி உற்பத்தி செய்யப்படவில்லை என்றால் அவை தரமற்றவை ஆகும்.
தமிழகத்தில் 29 சதவீதம் மருந்துகளில் தரம் குறைவு - ஆய்வில் தகவல்
Published on

சென்னை,

மத்திய, மாநில அரசுகள் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மருந்துகளின் தரம் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வுகளை நடத்துகிறது. மருந்தகங்கள், சில்லறை விற்பனையகங்கள், மொத்த விற்பனைக் கூடங்கள், கிடங்குகளில் ஏதேனும் சில மருந்துகளை எடுத்து பரிசோதிப்பது வழக்கம்.

மருந்து கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகளின்படி உற்பத்தி செய்யப்படவில்லை என்றால் அவை தரமற்ற மருந்துகளாக கருதப்படும். அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் நாடு முழுவதும் 215 மருந்துகள் தரமற்றவையாக கண்டறியப்பட்டது. அதில், தமிழகத்திலிருந்து மட்டும் 43 மருந்துகள் இடம்பெற்றிருந்தன.

தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் 147 மருந்துகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில், 29 சதவீத மருந்துகள் மருந்து கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகளின் கீழ் உற்பத்தி செய்யப்படாதது தெரியவந்தது. இதனால், தரம் குறைவாக இருப்பதாக கணக்கில் கொள்ளப்பட்டது. இதேபோல, கர்நாடகாவில் 21 சதவீதமும், ராஜஸ்தானில் 17 சதவீதமும் தரமற்ற மருந்துகள் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com