காவல் துறையில் 29,108 பணியிடங்கள் உருவாக்கப்படும் - முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு

காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கையை முதல்-அமைச்சர் விஜய் தாக்கல் செய்தார்.
முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

சட்டசபையில் இன்று (வியாழக்கிழமை) காவல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது.

மானியக் கோரிக்கை விவாதம்

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி 2026-2027-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டும், 6-ந் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஆகஸ்டு 7, 10,11 ஆகிய தேதிகளில் பட்ஜெட் மீதான விவாதமும், 12-ந் தேதி நிதி அமைச்சர் மரிய வில்சன், வேளாண் அமைச்சர் வினோத் ஆகியோரின் பதில் உரையும் இடம் பெற்றது.

இந்த நிலையில், ஆகஸ்டு 17-ந் தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. இதுவரை, 43 துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்து முடிந்துள்ளது.

மானியக் கோரிக்கை தாக்கல்

இந்த நிலையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடந்தது. முன்னதாக, துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டு முதல்-அமைச்சர் விஜய் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

  • மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக அடுத்த 5 ஆண்டுகளில் உருவாக்கப்படும். தமிழ்நாடு காவல் படையில் இவ்வாண்டில் 5,000 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர்

  • போதைப் பொருள் பயன்பாட்டை கிராமம் வெற்றிகரமாக ஒழிக்கும் ஒன்றுக்கு ரூபாய் 10 இலட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்

  • ரூபாய் 212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும்.

  • செயற்கை நுண்ணறிவு, நவீன டிஜிட்டல் தடயவியல், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு, நவீன தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்

  • லஞ்ச லாவண்யமற்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநிலத்திலுள்ள அனைத்து காவல் பிரிவுகளுக்கும் அனுமதித்திருந்த நி லை யங்க ளுக்கும், சிறப்புப் எதிர்பாரா செலவினம் (Contingency Fund) உயர்த்தி வழங்கப்படும்

  • பணியின்போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூபாய் 1 கோடி வழங்கப்படும்

  • பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை (Ex-gratia Payment) இருபது இலட்சம் ரூபாயிலிருந்து முப்பது இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்

  • வண்டலூர் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சியகத்தில் (Tamil Nadu Police Academy) உள்விளையாட்டு வெளிப்புற அரங்கம் மற்றும் விளையாட்டு வசதிகள் ரூபாய் 23 கோடி செலவில் அமைக்கப்படும்

  • சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதிய மரபணு ஆய்வுப்பிரிவுகள் (DNA TESTING FACILITY) சுமார் 14 கோடி செலவில் நிறுவப்படும்

  • 6 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் 16 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்

  • 10 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 131 புதிய குடியிருப்புகள் ரூபாய் 80 கோடி செலவில் கட்டப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் பயிற்சிக் கழகத்தின் (Fire and Rescue Services Academy) இரண்டாம் கட்டப் பணிகள் ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்

  • காவல் துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக புதிய வாகனங்கள் ரூபாய் 200 கோடி செலவில் வாங்கப்படும்

  • ஆவடி ஆணையரகத்தில் உள்ள ஆவடி காவல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிய பூந்தமல்லி காவல் மாவட்டமும் மற்றும் பூந்தமல்லி காவல் சரகம் பிரிக்கப்பட்டு திருமழிசை காவல் சரகமும் உருவாக்கப்படும்

  • தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட சட்டம் ஒழுங்கு காவல் மாவட்டங்கள் மற்றும் சரகங்களை மறுசீரமைப்பு செய்து புதிதாக கிளாம்பாக்கம் உருவாக்கப்படும். காவல் மாவட்டம் மேலும், கூடுவாஞ்சேரி சரகத்தை இரண்டாகப் பிரித்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் சரகம் உருவாக்கப்படும்

  • காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு காவல் பிரிவுகளின் தூய்மைப் பணிகள் வெளிமுகமை (outsourcing) மூலம் ஆண்டிற்கு ரூபாய் 60 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்

  • கோயம்புத்தூர் மாநகரம், காந்திபுரத்தில் காட்டூர் காவல் நிலையம் மற்றும் இதர அலுவலகக் கட்டடங்கள் ரூபாய் 21 கோடி செலவில் கட்டப்படும்

  • நீலகிரி மாவட்டம், எமரால்டு காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 4.15 கோடி செலவில் கட்டப்படும்

  • காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 3.29 கோடி செலவில் கட்டப்படும்

  • சேலம் மாநகரம், கருப்பூர் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 2.65 கோடி செலவில் கட்டப்படும்

  • தூத்துக்குடி மாவட்டம், குளத்தூரில் புதிய நகர காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 2.53 கோடி செலவில் கட்டப்படும்

  • தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தில் புதிய ஊரகக் காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 2.14 கோடி செலவில் கட்டப்படும்

  • ஈரோடு மாவட்டம், கடத்தூர் (ஊரக) காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் ரூபாய் 1.76 கோடி செலவில் கட்டப்படும்

  • தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு ரூபாய் 1.9 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்படும்

  • தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையக் கட்டடம் ரூபாய் 1.95 கோடி செலவில் கட்டப்படும்

  • திருவாரூர் அனைத்து மாவட்டம், மன்னார்குடியில் மகளிர் காவல் நிலைய (போக்குவரத்து காவல் நிலையம் உட்பட) புதிய கட்டடம் ரூபாய் 3.66 கோடி செலவில் கட்டப்படும்

  • செங்கல்பட்டு மாவட்டம் ஆயுதப் படைக்கான புதிய நிர்வாகக் கட்டடம், விருந்தினர் இல்லக் கட்டடம், மோப்ப நாய்ப் படை பிரிவு கட்டடம், துணைக் காவல் கண்காணிப்பாளர் /காவல் ஆளிநர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் இதர கட்டடங்கள் ரூபாய் 91.52 கோடி செலவில் கட்டப்படும்

  • தென் காசி மாவட்டம், ஆயுதப்படை வளாகத்தில் நிர்வாகக் கட்டடம், ஆயுதக் கிடங்கு (Bell of Arms), காவலர் தங்குமிடங்கள் (Barracks), வாகனங்களுக்கான கொட்ட கை (MT Shed), பயிற்சி காவலர் உணவகம் (Cadet Mess) மற்றும் கேன்டீன் ரூபாய் 37.30 கோடி செலவில் புதிதாக கட்டப்படும்

  • திருப்பத்தூர் மாவட்டம் ஆயுதப்படைக்கான உட்கட்டமைப்பு ரூபாய் 13 கோடி செலவில் புதிதாக ஏற்படுத்தப்படும்

  • மதுரையில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை, 6-ஆம் அணிக்கு (Tamil Nadu Special Police, VI Battalion) புதிய நிர்வாகக் கட்டடம் ரூபாய் 1243 கோடி செலவில் கட்டப்படும்

  • கோயம்புத்தூர் மாவட்டம், உப்பிலி-பாளையத்தில் மாவட்ட காவல் பணியாளர்களுக்காக ரூபாய் 68 கோடி

  • செலவில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும்

  • திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆயுதப்படை காவலர் பணியாளர்களுக்காக 108 புதிய குடியிருப்புகள் ரூபாய் 55 கோடி செலவில் கட்டப்படும்

  • புதுக்கோட்டை மாவட்ட வளாகத்தில் 124 புதிய காவலர் ஆயுதப்படை குடியிருப்புகள் ரூபாய் 39 கோடி செலவில் கட்டப்படும்

  • சென்னை மாநகரம், மண்ணடியில் ரூபாய் 19.89 கோடி செலவில் காவல் பணியாளர்களுக்கான புதிய குடியிருப்புகள் கட்டப்படும்

  • சென்னை மாநகரம், தியாகராய நகர், காமராஜர் காலனியில் 20 காவல் உதவி ஆய்வாளர் (Sub-Inspector) குடியிருப்புகள் ரூபாய் 10.36 கோடி செலவில் புதிதாக கட்டப்படும்

  • தமிழ்நாடு முழுவதும் உள்ள காவலர் குடியிருப்புகளில் உள்ள கழிவுநீர் மற்றும் வடிகால் அமைப்புகள் ரூபாய் 36 கோடி செலவில் புதுப்பிக்கப்படும்

  • சென்னை தடய அறிவியல் துறையின் ஆவணப் பிரிவிற்கு தேவையான வீடியோ ஸ்பெக்டரல் கம்பாரட்டர் (Video Spectral Comparator) என்ற புதிய அதிநவீன ஆய்வு கருவி வாங்குதல்

  • சேலம் மற்றும் திருநெல்வேலி வட்டார தடய அறிவியல் ஆய்வகங்களில் புதிதாக கணினி தடய அறிவியல் பிரிவுகள் அமைக்கப்படும்

  • மிக முக்கிய மற்றும் மிக மிக முக்கிய பிரமுகர்களின் உணவு மாதிரிகளை ஆய்வு செய்வதற்கென்றே பிரத்யேகமான ஆய்வுப் பிரிவு ஒன்றினை தடய அறிவியல் துறையின் சென்னை முதன்மை ஆய்வகத்தில் நிறுவுதல்

  • சென்னை தடய அறிவியல் துறையின் முதன்மை ஆய்வகத்தில் உள்ள துப்பாக்கிப் பிரிவின் ஆய்வுத் திறன் மேம்படுத்தப்படும்

  • 3 சிப்காட் தொழிற்பூங்காக்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் ரூபாய் 4.59 கோடி செலவில் நிறுவப்படும்

  • 6 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களை ரூபாய் 12.84 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்

  • 15 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களுக்கு ரூபாய் 65.90 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களின் பயன்பாட்டிற்காக 50 நீர் தாங்கி வண்டிகள் (Water Tenders) ரூபாய் 60 கோடி செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு புதிதாக 50 துரித மீட்பு ஊர்திகள் (Quick Response Vehicles) ரூபாய் 17.50 கோடி செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு புதிதாக இரண்டு வான்நோக்கி உயரும் ஏணி கொண்ட ஊர்திகள் (Aerial Ladder Platform vehicles) ரூபாய் 60 கோடி செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மீட்புப்பணிகள் மற்றும் துறையின் பயன்பாட்டிற்கு புதிதாக 10 கனரக மீட்பு வாகனங்கள் (Heavy Duty Wreckers) ரூபாய் 8 கோடி செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களின் பயன்பாட்டிற்கு 50 ஒருங்கிணைந்த மீட்பு கருவிகள் (Combl -tools) ரூபாய் 6 கோடி செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் ஸ்கூபா வீரர்கள் துறையின் பயன்பாட்டிற்கு 50 ஸ்கூபா உடைகள் (Scuba Suits) ரூபாய் ஒரு கோடி செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு 25 புகை வெளியேற்றும் கருவிகள் (Smoke Exhausters) ரூபாய் 1.75 கோடி செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு 25 கண்காணிப்பு ட்ரோன்கள் (Surveillance Drones) ரூபாய் 2 கோடி செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டிற்கு 10 பளுதூக்கும் ட்ரோன்கள் (Payload Drones) ரூபாய் 1.20 கோடி செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் பயன்பாட்டில் உள்ள மூச்சுக் கருவிகளுக்கு மறுநிரப்பம் செய்ய ஐந்து காற்று பிடிக்கும் கருவிகள் (Breathing Apparatus - Air Compressors) ரூபாய் 65 லட்சம் செலவில் வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் உள்ள Fireman" (தீயணைப்போர்) என்ற பதவியின் பெயர் "Firefighter" (தீயணைப்பு வீரர்) என மாற்றி அழைக்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் புதியதாக பெண் தீயணைப்பு வீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை பணியாளர்களுக்கான சீருடைப்படியை காவல் துறை பணியாளர்களுக்கு இணையாக ரூபாய் 3.77 கோடி செலவில் வழங்கப்படும்

  • தமிழ்நாடு முதலமைச்சரின் தீயணைப்புப் பணிகள் பதக்கம் பொங்கல் தினத்தன்று வழங்கப்படும் எண்ணிக்கை மற்றும் படித்தொகை உயர்த்தி வழங்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில், சென்னை மண்டலத்தில், தாம்பரம் மற்றும் ஆவடி ஆகிய இரண்டு புதிய மாவட்ட அலுவலகங்கள் ரூபாய் 2.80 கோடி செலவில் உருவாக்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் முதல் கட்டமாக இரண்டு ஸ்கூபா டைவிங் குழுக்கள் ரூபாய் 80 லட்சம் செலவில் உருவாக்கப்படும்

  • தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையில் புதிதாக ஆய்வுக்குழு பிரிவு உருவாக்கப்படும். முதற்கட்டமாக 10 குழுக்கள் ரூபாய் 3.20 கோடி செலவில் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com