வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்த நாள்; தமிழில் பதிவிட்டு பிரதமர் மோடி புகழாரம்

தன் வீரத்தால் ஆங்கிலேயரை வெற்றிகொண்டு, சிவகங்கைச் சீமையின் ராணியாக முடிசூட்டிக்கொண்டவர் வீரமங்கை வேலுநாச்சியார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-
ராணி வேலு நாச்சியாரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். துணிச்சலையும், வியூகத் திறமையையும் கொண்டிருந்த அவர், இந்தியாவின் துணிச்சல் மிக்க வீராங்கனைகளில் ஒருவராக நினைவுகூரப்படுகிறார். காலனித்துவ ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த அவர், இந்தியாவை ஆள இந்தியர்களுக்கே உரிமை உண்டு என்பதை வலியுறுத்தினார். நல்லாட்சி மற்றும் கலாச்சார பெருமைக்கான அவரது உறுதிப்பாடும் போற்றத்தக்கது. அவரது தியாகமும் தொலைநோக்குத் தலைமையும் பல தலைமுறைகளை ஊக்கப்படுத்தும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






