

விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள உப்புமுத்தாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்குமரன் மகள் சத்யா (வயது 7). இவள் மடுகரையில் உள்ள ஒரு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இவள், சிறுவந்தாடு- பூவரசங்குப்பம் சாலையில் நின்றுகொண்டிருந்தாள். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர் சிறுமி சத்யாவின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த சத்யாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமி சத்யா, கோமா நிலைக்கு சென்று விட்டதால் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.