இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா இன்று: எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன் டுவிட்

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா இன்று:  எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தினகரன் டுவிட்
Published on

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழர்களின் வீர வரலாற்றில் எக்காலத்திற்கும் அழியாத தடம் பதித்த பேரரசரும், கண்ட போர்கள் அனைத்திலும் வெற்றி வாகையை மட்டுமே சூடியவருமான சுவரன்மாறன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சதயவிழா இன்று.

வீரத்திற்கும், ஆட்சி திறமைக்கும், தமிழ் பற்றுக்கும் ஒப்பற்ற அடையாளமாக திகழ்ந்ததோடு, தமிழ் மொழியின் சிறப்புகளை கல்வெட்டுகளின் மூலம் அடுத்த தலைமுறைக்கு கடத்திய பெருமைக்குரியவருமான இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com