திருமூர்த்தி அணையில் இருந்து 2-ம் சுற்று தண்ணீர் திறப்பு

அணையிலிருந்து 20.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமூர்த்தி அணையில் இருந்து 2-ம் சுற்று தண்ணீர் திறப்பு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

பரம்பிக்குளம் ஆழியார் பாசனத் திட்டத்தொகுப்பில் துணை பாசனப்பகுதியாக கருதி திருமூர்த்தி அணையின் பொதுக்கால்வாய்சரகம் 1.200 கிலோ மீட்டரில் பிரியும் உடுமலைக் கால்வாயில் சரகம் 5.130 கிலோ மீட்டரில் பிரியும் மானுப்பட்டி கிளை வாய்க்காலின் சரகம் 2.653 கிலோ மீட்டரில் உள்ள மதகின் வழியாக. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆலாம்பாளையம் கிராமத்திலுள்ள பூசாரிநாயக்கன் ஏரிக்கு 27.06.2025 முதல் 29.06.2025 முடிய, மொத்த நீரிருப்பு மற்றும் நீர்வரத்தினைப் பொறுத்து. திருமூர்த்தி அணையிலிருந்து 20.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல் (நீரிழப்பு உட்பட) பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவைக்காக இரண்டாம் சுற்று தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com