2-வது முறை: கோல்ட் பிளேக் பிரீமியம் சிகரெட் விலை மேலும் ரூ.10 உயர்வு!

10 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.125-ல் இருந்து ரூ.135 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
2-வது முறை: கோல்ட் பிளேக் பிரீமியம் சிகரெட் விலை மேலும் ரூ.10 உயர்வு!
கோல்ட் பிளேக் பிரீமியம் சிகரெட்
Published on: 

சென்னை,

ஐடிசி நிறுவனம் தனது பிரபல சிகரெட் பிராண்டான 'கோல்ட் பிளேக் பிரீமியம்' விலையை பாக்கெட்டிற்கு ரூ.10 உயர்த்தியுள்ளது.

புதிய விலை விவரம்

இந்தியாவின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான இந்தியன் டொபாக்கோ கம்பெனி (ITC), தனது பிரபல சிகரெட் பிராண்டான 'கோல்ட் பிளேக் பிரீமியம்' விலையை பாக்கெட்டிற்கு ரூ.10 உயர்த்தியுள்ளது. 10 சிகரெட்டுகள் கொண்ட ஒரு பாக்கெட்டின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ரூ.125-ல் இருந்து ரூ.135 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு சிகரெட்டின் விலை ரூ.13.50 ஆக அதிகரித்துள்ளது.

நடப்பாண்டில் 2-வது உயர்வு

நடப்பு 2026-ம் ஆண்டில் இந்த சிகரெட் பிராண்டின் விலை உயர்த்தப்படுவது இது 2-வது முறையாகும். முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் இந்த பாக்கெட்டின் விலை ரூ.115-ல் இருந்து ரூ.125 ஆக உயர்த்தப்பட்டது. தற்போதைய உயர்வையும் சேர்த்து, இந்த ஆண்டில் மட்டும் பாக்கெட்டிற்கு மொத்தம் ரூ.20 விலை அதிகரித்துள்ளது.

நவம்பர் இறுதியில் அமல்

ரூ.135 என புதிய விலை அச்சிடப்பட்ட பாக்கெட்டுகள் வருகிற நவம்பர் மாதத்தின் 4-வது வாரத்தில் இந்தியா முழுவதும் உள்ள விநியோக கிடங்குகளுக்கும், அதனைத் தொடர்ந்து சில்லறை விற்பனைக் கடைகளுக்கும் விற்பனைக்கு வரவுள்ளன. கடைகளில் உள்ள பழைய இருப்பு விற்றுத் தீரும் வரை பழைய விலையிலேயே விற்பனை செய்யப்படும்.

விலை உயர்வுக்கான காரணம்

கடந்த பிப்ரவரி மாதம் முதல் அமல்படுத்தப்பட்ட கூடுதல் கலால் வரி மற்றும் 40 சதவீத ஜிஎஸ்டி வரி மாற்றங்களால் நிறுவனத்திற்கு வரிச் சுமை அதிகரித்துள்ளது. வரி உயர்வை ஒரே நேரத்தில் சுமத்தாமல் படிப்படியாக ஈடுகட்டும் வகையிலேயே நிறுவனம் விலையை உயர்த்தி வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X