லாரி டிரைவரை தாக்கிய 3 பேர் கைது

நெல்லையில் லாரி டிரைவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
லாரி டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
Published on

நெல்லை தாழையூத்து அருகே பாலாமடை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 45). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் பாலாமடை பஞ்சாயத்து அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (27), பாளையங்கோட்டையை சேர்ந்த மற்றொரு ஆறுமுகம் (32), விக்னேஷ் (22) ஆகியோர் முன்விரோதம் காரணமாக முருகனை கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சீவலப்பேரி போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com