நெல்லையில் பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

நெல்லை வண்ணாரப்பேட்டை அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டை அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ் மற்றும் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அனுமதியின்றி இயங்கிய ஒரு தனியார் மன்றத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தை சேர்ந்த பாண்டி மகன் செல்வம் (வயது 50), கீழநத்ததை சேர்ந்த சங்கரன் மகன் சிவசுப்பிரமணியன்(50), கொக்கிரகுளத்தை சேர்ந்த கணபதி மகன் மாரிமுத்து(33) ஆகியோரிடம் இருந்து பணம் ரூ.4,160 மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய அட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






