

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் கோவில்பட்டி உட்கோட்ட டி.எஸ்.பி. ஜெகநாதன் மேற்பார்வையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் கோவில்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில், அவர்கள் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்களான இருளப்பசாமி (வயது 52), மணிகண்டன்(50) மற்றும் மனோஜ்(23) ஆகியோர் என்பதும், அவர்கள் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
உடனே மேற்சொன்ன போலீசார் மேற்சொன்ன இருளப்பசாமி, மணிகண்டன், மனோஜ் ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்த 994 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.