கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

சாயல்குடி அருகே கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது
Published on

சாயல்குடி,

சாயல்குடி போலீஸ் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் பேரில் சாயல்குடி சப்-இன்ஸ்பெக்டர் சல்மோன் தலைமையிலான போலீசார் ரோச்மாநகர் கிராமத்தில் ஜேம்ஸ் மகன் மெர்ஜோ (26) என்பவரை சோதனை செய்தனர்.அவர் வைத்திருந்த 5 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அவரை விசாரித்ததில் கொண்டு நல்லான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் (24) அதே கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் (20) ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பாலமுருகன் வீட்டில் சோதனையிட்டதில் கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மெர்ஜோ, பாலமுருகன், சிவக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com