தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது: பைக் பறிமுதல்


தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது: பைக் பறிமுதல்
x

காயல்பட்டினம் பகுதியில் ஒரு பள்ளி அருகே சந்தேகப்படும்படி பைக்கில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலிபன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காயல்பட்டினம் பகுதியில் ஒரு பள்ளி அருகே சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

அதில் அவர்கள் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த உண்ணாமலை (வயது 28), ஆறுமுகநேரியை சேர்ந்தவர்களான அண்ணாமலை காஜன்(25), முகேஷ்(18) ஆகியோர் என்பதும் அவர்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்சொன்ன 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story