தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது

தூத்துக்குடியில் மதுபோதையில் தகராறு செய்து, வாலிபரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு: 3 பேர் கைது
Published on

தூத்துக்குடி ஜெ.ஜெ.நகரைச் சேந்தவா ஸ்ரீராம்(எ)வெள்ளையன் (வயது 24). இவர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று கெண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் மதுபேதையில் தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா.

இதுகுறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி, தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதனையடுத்து அரிவாள் வெட்டு சம்பவத்தில் தொடர்புடைய, தூத்துக்குடியில் திரு.வி.க. நகரைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் மதன்குமார் (வயது 23), 3வது மைல் பகுதியைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் மாலைக்கனி (வயது 23), கண்ணன் மகன் சிவா (வயது 22) ஆகிய 3 பேரை பேலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com