ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

சங்கரன்கோவிலில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
Published on

தென்காசி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் சங்கரன்கோவில்-சுரண்டை ரோட்டில் தளவாய்புரம் விலக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடுவேனை மறித்து சோதனை செய்தபோது, அதில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து லோடு வேனில் இருந்த கீழப்பாவூர் வணிகப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் (வயது 40), தென்காசி புங்கம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த முத்துமாரி (33), கீழப்பாவூர் வேத கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியுடன் லோடு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com