கொலைக்கு பழிக்குப்பழி வாங்க தவறான முகவரியில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது

சென்னை பெரியமேடு பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள்.
பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது
Published on

சென்னை,

சென்னையில் கொலைக்கு பழிக்குப்பழி வாங்க தவறான முகவரியில் பெட்ரோல் குண்டு வீசிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை பெரியமேடு நேவல் மருத்துவமனை சாலை 4-வது தெருவில் வசிக்கும் ஒரு பெண்ணின் வீட்டின் முன்பு நேற்று முன்தினம் இரவு பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். பின்னர் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர்.

3 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெட்ரோல் குண்டு வீசியதாக டைசன், ஆளவந்தான், ஜிவேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கொலைக்கு பழிக்குப்பழி

கடந்த ஆண்டு ஜூன் மாதம் டைசனின் அண்ணன் பிரேம்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விஜயநாராயணன் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரை பழிக்குப்பழி வாங்குவதற்காக அவரது அக்காள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச இவர்கள் வந்துள்ளனர். ஆனால் தவறுதலாக வேறு வீட்டில் பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com