

கடலூர்,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பெரிய காட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (27 வயது. இவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணமான இளம்பெண் ஒருவர் குளிப்பதை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் அந்த பெண்ணிடம், அந்த வீடியோவை காட்டி தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லையென்றால் அந்த வீடியோவை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணை அருகில் உள்ள முந்திரி காட்டுக்கு வரும்படி பிரகாஷ் அழைத்தார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், இளம்பெண்ணின் வீடியோவை அதே ஊரை சேர்ந்த தனது நண்பர்களான கோகுல், இளவரசன் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் காடாம்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோகுல், பிரகாஷ், இளவரசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.