

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி பகுதியில் போக்சோ வழக்கில் ஈடுபட்ட நாங்குநேரி வட்டம், கோவைகுளம் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் இசக்கிபாண்டி (வயது 26) மற்றும் பாண்டி என்பவரின் மகன் முப்பிடாதி(30) ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுதா, மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதேபோல், பாப்பாக்குடி பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் மிரட்டல் வழக்கில் ஈடுபட்ட சேரன்மகாதேவி வட்டம், நந்தன்தட்டை பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் பாலகிருஷ்ணன்(50) என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு பாப்பாக்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம், மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மேற்சொன்ன இன்ஸ்பெக்டர்களின் வேண்டுகோளின்படி, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார், மாவட்ட ககெ்டர் சுகுமாரிடம் பரிந்துரை செய்ததன் பேரில், கலெக்டர் உத்தரவின்படி நேற்று மேற்சொன்ன 3 பேரும் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை குற்றச்செயல்களில் ஈடுபட்ட 50 பேர் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.