குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டர் சட்டத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி பூபாலராயர்புரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்ற ஆரோக்கிய சேவியர் மகன் சகாய வினோத் (வயது 38). இவர் மனைவியை கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி வடபாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதே போன்று ஆறுமுகநேரி வடக்கு காமராஜபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் என்ற பாம்பே முருகன் (47), யோவான் மகன் ஜெபராஜ் (27) ஆகியோரை கொலை முயற்சி வழக்கில் ஆறுமுகநேரி போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.

இவர்கள் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சகாயவினோத், முருகன் என்ற பாம்பே முருகன், ஜெபராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவு நகலை சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினர்.

இதன் மூலம் நடப்பு ஆண்டில் இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 23 பேர் உள்பட 100 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com