தூத்துக்குடியில் 7 கிலோ கஞ்சா, 6 அரிவாள், கத்தியுடன் 3 பேர் கைது

தூத்துக்குடி பீச்ரோட்டில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தூத்துக்குடியில் 7 கிலோ கஞ்சா, 6 அரிவாள், கத்தியுடன் 3 பேர் கைது.
Published on: 

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் 7 கிலோ கஞ்சா மற்றும் 6 அரிவாள், கத்தியுடன் 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து செல்போன், பைக் மற்றும் மேற்சொன்ன அனைத்தையும் கைது செய்தனர்.

7 கிலோ கஞ்சா, 6 அரிவாள், கத்தி பறிமுதல்

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) திருமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் தூத்துக்குடி பீச்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 3 பைக்குகளில் வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தபோது, அவர்களிடம் ஒரு சாக்கு பையில் இருந்த 7 கிலோ கஞ்சா மற்றும் 6 அரிவாள், கத்தி, 3 செல்போன் மற்றும் அவர்கள் ஓட்டி வந்த பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

3 பேர் கைது

அதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள், தூத்துக்குடி மேலசண்முகபுர‌த்தை சேர்ந்த அற்புதராஜ் மகன் செல்வம்(எ) செல்வசதீஷ் (வயது 25), லெவஞ்சிபுரம் முதல் தெருவை சேர்ந்த முத்துராஜ் மகன் சிவஞானமூர்த்தி(25), சிவந்தாகுளம் ரோடு 2-வது தெருவை சேர்ந்த ஸ்டாலின் மகன் வினோத்(23) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது.

இவர்கள் 3 பேர் மீதும் பல வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளது. இதனால் சரித்திரப்பதிவேட்டில் உள்ள‌ குற்றவாளியாக இடம்பெற்றுள்ளர். பின்னர் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X