குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி

குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியானார்கள்.
குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
Published on

கோவை,

கோவை அருகே சூலூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஜஷ்வந்த் (வயது 8), அன்பு என்பவருடைய மகன் அகிலன் (10), கணேஷ் என்பவருடைய மகன் சஞ்சீவ் (7) ஆகியோர் அங்குள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தனர்.

இந்த நிலையில் அந்த மாணவர்கள் 3 பேரும், நேற்று மாலை 4.30 மணிக்கு பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தனர். பின்னர் விளையாட செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு, சூலூர் சின்னகுளம் பகுதிக்கு சென்றனர். அங்குள்ள குளத்துக்குள் இறங்கி குளித்தனர். ஆனால் அவர்களுக்கு நீச்சல் தெரியாது.

3 பேரும் சாவு

இதற்கிடையில் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் 3 சிறுவர்களும் தண்ணீரில் மூழ்கினார்கள். அப்போது ஒருவரையொருவர் காப்பாற்ற முயன்றபோது 3 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com